Tamil Social Media கவிதை

ஏமாற்றம் ஒன்றும்
புதிதல்ல
ஏங்கிதவிக்கும்
இதயத்திற்கு
ஏமாற்றும் விதம்
தான் புதிது


புரிதல் என்பது
வார்த்தைகளில் அல்ல
உணர்வுகளில் ஒன்றி
இருக்க வேண்டும்


ஞாபகங்கள்
அழிக்கபடுவதில்லை
மாறாக ஆழமாக
விதைக்கபடுகின்றன


சில சூழ்நிலைகளை
கடந்து செல்ல
உடல் வலிமையை விட
மன வலிமையே
அதிகம் தேவைப்படுகிறது


பிடித்து போனதாய்
எல்லோரையும்
மனதினில் விதைக்காதீர்கள்
பின்னொரு நாளில் சிலர்
முட்களாகவும் குத்துவார்கள்


நினைத்திருக்கவில்லை
இறந்த காலத்தில்
இத்தனை ரம்மியம்
இருந்திருக்குமென்று
கடந்த நாட்களெல்லாம்
வெறும் நினைவுகளாய்
போய்விடுமென்றும்


சில உறவுகள்
பளீரென மின்னலாய்
வந்து அதிரடியாக
பல மாற்றங்களை
செய்து விட்டு
சென்று விடுகிறார்கள்
நம் வாழ்க்கையில்


உளறல்கள் கூட
கவிதையாகிறது
சில நேரங்களில்

கஷ்டங்களை
தாங்கும் சக்தி
அற்று போனதால்
கண்கள்
உருகி வழிகிறதோ


எல்லாமே
சில காலம் தான்
அது உறவாக
இருந்தாலும் சரி
உயிராக
இருந்தாலும் சரி


வாழ்க்கையில்
பாதியில் வந்து
பாதியில் விட்டு
செல்பவர்களே அதிகம்


ஏமாற்றங்கள்
மிஞ்சினாலும்
எதிர்பார்ப்பை
நிறுத்தி
கொள்வதில்லை
மனது


சில வினாக்களுக்கு
பதில் நாம் மட்டுமே


அத்தனை
கேள்விகளுக்கும்
சிறந்த பதில்
மௌனம்


நீதான் முக்கியம்
என தொடங்கும்
உறவுகள் எல்லாம்
யார் நீ
என்று முடிகிறது


புன்னகையால்
கடந்திடுங்கள்
சில மாற்றங்களை
வலிகளை வலிமையாக்கும்
வல்லமை கொண்டவை அவை


வெற்றிடத்தின் வலி
உணரவில்லை என்றால்
அங்கு அன்பே இல்லை


உன்னிடம் தொலைத்த
என் நிஜத்தினை
எங்கே சென்று
தேடுவது


எதன் மீதும்
அதிக அன்பு வை
வைக்கிறோமோ
அதை நினைத்து
பலமுறை வருந்த
வேண்டிய நிலை வரும்


வெற்றிடத்தின் வலி
உணர்த்தவில்லை என்றால்
அங்கு அன்பே இல்லை


தான் மாறவில்லை
என்றாலும்
சூழ்நிலை ஒவ்வொரு
மனிதனையும்
மாற்றிவிடுகிறது


விடை தேடும்
பயணம் தான் வாழ்க்கை
சிலருக்கு விடை தெரியவில்லை
பலருக்கு வினாவே
புரியவில்லை


வாழ்க்கையில்
வரும் எதுவும்
சொல்லி விட்டு
வருவதில்லை
ஆனால்
வந்த எதுவும்
எதையோ
சொல்லி
கொடுக்காமல்
போவதில்லை


வாழ்க்கையில்
தவறாக தெரிந்த
பல முடிவுகள் இன்று
சரியாக தெரியலாம்
சரியாக தெரிந்த
பல முடிவுகள் நாளை
தவறாக தெரியலாம்


உரிமை இல்லாத இடத்தில்
ஓராமாக நிற்பதை விட
வெளியேறி விடுவது மேல்


கஷ்டம் கூட
இஷ்டம் ஆகிவிடுகிறது
ஆதரவாய் உன் தோள்
சாய்கையில்


விடைகள்
சில தேடுகையில்
வினாக்களே
பல எழுகின்றன
வாழ்க்கையில்


பேசிய வார்த்தைகள்
நினைவுகளாகவும்
பேசாத வார்த்தைகள்
கவிதைகளாகவும்


என்னிலடங்கும்
என் இதயத்துடிப்பில்
ஏனோ எண்ணிலடங்கா
உன் நியாபகங்கள்


ஆழமான
கடலில் இறங்குறதும்
ஆழமான அன்பில்
இறங்குறதும் ஒண்ணு தான்
கரை சேர்வது கடினம்


நான் நானாகவே இருக்கிறேன்
வளர்வதும் தேய்வதும்
உங்களின் பார்வையை பொறுத்தது


எதையுமே
எதிர்பார்க்காத போது
கிடைத்த அன்பு
எதிர் பார்க்கும் போது
தூரமானதேனோ


அன்பு வேண்டும் என்று
எவரிடமும் கெஞ்சாதீர்கள்
அது உண்மையாக இருந்தால்
நீங்கள் கையேந்த
வேண்டிய அவசியமில்லை


சில வரிகளில் கூறப்படும்
வலிகளின் ஆழம் எல்லோராலும்
புரிந்துகொள்ள முடிவதில்லை
உணர்வுபூர்வமாக
அனுபவப்பட்டவர்களை தவிர


உயிர்
எழுத்தாய்
இருந்தேன்
மெய்
எழுத்தாய்
வந்தாய்
உயிர்மெய்
எழுத்தானோம்


விமர்சனம் செய்வது உங்களுக்கு
வாடிக்கையாகிப்போன
ஒன்று தான்
உங்களோடு விவாதித்து
எனக்கு எந்த பயனும்
கிடைக்க போவதில்லை
ஆதலால் தான் கேட்டுவிட்டு
மவுனமாக
கடந்து செல்கிறேன்


எப்போதெல்லாம்
ஒரு வெறுமை ஆட்கொள்கிறதோ
அப்போதெல்லாம் துணையாக
சில கண்ணீர் துளிகள்


பேரன்பில்
உனக்கானது என்று
உணர்த்தப்படுவதை
விடவும்
தனக்கானது தான் என்று
உணரும் தருணங்கள்
பேரழகு


இணைவது எல்லாம்
என்றோ பிரிவதற்கே


வார்த்தைகளை மட்டுமே
பு‌ரி‌ந்து கொள்பவர்களால்
ஒரு போதும் உணர்வுகளை
புரிந்து கொள்ள முடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *